Categories
தேசிய செய்திகள்

நிரவ் மோடிக்கு அதிர்ச்சி…7200கோடியை வட்டியுடன் செலுத்த உத்தரவு..!!

மும்பை கடன் வசூல் தீர்ப்பாயம் 7 ,200 கோடி ரூபாயை   வட்டியோடு சேர்த்து  செலுத்தக் கோரி, நிரவ் மோடிக்கு  உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் தேசிய  வங்கி கிளையில் வைர வியாபாரியான  நிரவ் மோடி அவரது நண்பருடன் சேர்ந்து சட்டத்திற்கு புறம்பாக  சுமார் 14,000 கோடி பணத்தை பெற்று மோசடி செய்துள்ளநிலையில்,  மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி மற்றும் அவரது நண்பர் மீது  சிபிஐ  வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு  விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பாக, நிரவ் மோடி இங்கிலாந்துக்கும், அவரது நண்பர் பார்புடா நாட்டிற்கும் தப்பி சென்றனர்.

Image result for nirav modi

இதனையடுத்தது  இருவரையும் இந்தியாவிற்கு  கொண்டு வரும் முயற்சியில்   மத்திய அரசு, தீவிரம் காட்டி  வருகிறது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை கடன் வசூல் தீர்ப்பாயம் நிரவ் மோடியும்   அவரது நண்பரும்   கடந்த ஆண்டு  ஜுன் மாதத்திற்கான  14.3% வட்டியைச் சேர்த்து சுமார் 7,029 கோடி ரூபாயை  ஒப்படைக்க வேண்டும் என்றும், அபராதமாக சுமார் 200 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என்றும்  உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |