சுவாசப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் நிரந்தர தீர்வு காணுவதற்கு இதை மட்டும் செய்து வந்தால் போதும்.
தற்போதைய காலகட்டத்தில் புதுப்புது நோய்கள் உருவாகின்றன. அவ்வாறு உருவாகும் நோய்கள் அனைத்தும் முதலில் குறிவைத்தது நம் சுவாசத்தை தான். நம் உயிரை காக்கும் சுவாசத்தை முதலில் குறி வைத்து தாக்குகிறது. அதனால் அவதிப்படுபவர்கள் ஏராளம். அவ்வாறு சுவாச பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை பார்க்கலாம் வாருங்கள்.
மருத்துவ குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தின் விதையிலுள்ள தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் வேறு எந்த தாவரத்திலும் இல்லை. சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படும் கருஞ்சீரகம், வீக்கம் தணிக்க உதவும். ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சனைகள் நெருங்காமல் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தரும். இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி புற்றுநோய் கட்டிகள் ஏற்படாதபடி பாதுகாக்கும்.
இஞ்சி சுவாசக் கோளாறுகளை சரி செய்வதற்கு ஒரு சிறந்த நிவாரணி. இது நெஞ்சில் இருக்கும் கபத்தை கரைகிறது. தினமும் சிறிதளவு இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. சுவாசப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் ஒரு சில வாரங்களில் நல்ல பலன் கிடைக்கும். பூண்டு உணவில் சேர்த்துக் கொள்வதால் சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஓமம் விதைகள் இதற்கு சிறந்த நிவாரணி.