Categories
லைப் ஸ்டைல்

இனி இதை தூக்கி போடாதீங்க…. இப்படி செஞ்சி அசத்துங்க…. சூப்பரா இருக்கும்…!!

வாழைப்பழத்தோல் முகத்திற்கு எப்படி பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

நம்மில் பெரும்பாலானவர்கள் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டுஅதன் தோலை குப்பையில் தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் இதில் பல நன்மைகள் இருப்பது நம்மில் யாருக்கும் தெரியவில்லை. தற்போது இது எதற்கு பயன்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

முகத்திற்கு வாழைப்பழத்தோல்:

வாழைப்பழத் தோலை எடுத்து அதனுடன் கற்றாழையின் ஜெல்லை கலந்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். இதை கண்களுக்கு அடியில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் கருவளையம் மறைந்துவிடும்.

பாலை முகத்தில் தடவி மசாஜ் செய்த பிறகு, உலர்ந்த துணியால் துடைக்க வேண்டும். பின்னர் வாழைப்பழத்தை எடுத்து தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து விட்டு பின்னர் கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சிடும்.

பால் மற்றும் வாழைப்பழம் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் ஒரு தடவை இப்படி செய்தால் முகப்பருக்களை போக்க முடியும்.

பால் மற்றும் வாழைப்பழத்தோல் இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பருவினால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க முடியும்.

பால் மட்டும் வாழைப்பழத் தோலை கூழாக்கி பின் முகத்தில் தடவி கூழாக்கி கழுவினால் சருமத்திற்கு பொலிவு சேர்க்க முடியும்.

Categories

Tech |