இஎஸ்ஐ என்று அட்டை இருந்தால் இனி மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இ.எஸ்.ஐ. எனப்படும் பணியாளர் அரசு காப்பீட்டு திட்டம் மூலம் இனி உறுப்பினர்கள் வீடுகளுக்கு அருகிலேயே பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். தொலைதூரத்தில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.,ஒரு நிறுவனத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். மாத ஊதியம் ரூ.21 ஆயிரத்துக்குள் பெறுபவர் என்றால் உங்களுக்கு இ.எஸ்.ஐ., எனப்படும் இன்சூரன்ஸ் பொருந்தும். அதற்கென ஒரு அட்டை நிறுவனத்தால் வழங்கப்படும்.
அந்த அட்டை இருந்தால் சென்னை, வேலூர், கோவை போன்ற இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளுள்ள பகுதிகளில் மட்டும் தான் அச்சேவையை பெற முடியும் என்ற நிலையிருந்தது. அது மாற்றப்பட்டு தற்போது பல தனியார் மருத்துவமனைகள் இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.பயனாளியின் இல்லத்துக்கு 10 கி.மீத்தொலைவில் இ.எஸ்.ஐ.,e மருத்துவமனை இல்லாத பட்சத்தில், பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் (நாடு முழுவதும்) சிகிச்சை பெறலாம்.
இதற்கு இ.எஸ்.ஐ மருத்துவமனையின் பரிந்துரை தேவையில்லை. இன்சூரன்ஸ் அட்டை, ஆதார் அட்டை எடுத்துச் சென்றால் போதும். அதே போல் அருகில் உள்ள பட்டியலிடப்பட்ட மருந்தகத்திற்கு சென்றும் மருந்துகளை வாங்கிக்கொள்ளலாம். பரிசோதனை அல்லது மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தேவை இருப்பின், பயனாளிக்குப் பணமில்லா சிகிச்சை வழங்குவதற்காக 24 மணி நேரத்துக்குள் ஆன்லைன் முறையில் இ.எஸ்.ஐ-யின் ஒப்புதலை பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு https://www.esic.nic.in/regional-offices/20/Tamil-Nadu என்ற இணைய முகவரியில் உங்கள் மண்டல அலுவலக எண்களை தொடர்புகொள்ளலாம்.