பப்பாளிப் பழத்தை அதிக அளவில் சாப்பிட்டால் உடலில் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. அதன்படி பழங்களில் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். ஆனால் அதனை அதிக அளவு எடுத்துக் கொண்டால் ஆபத்து ஏற்படும்.
அதன்படி பப்பாளிப் பழத்தை அதிகம் சாப்பிடுவதால் என்னென்ன ஆபத்துகள் நேரும் என்பதை பார்க்கலாம் வாருங்கள். பப்பாளி பழத்தில் கரோட்டின்கள் அதிகம் நிறைந்துள்ளதால் அதனை அதிகம் சாப்பிடும்போது சரும பிரச்சனை உருவாகும். அதிலுள்ள என்சைம் உடலுக்குச் சென்றால் தொண்டை வீக்கம், சளி, காய்ச்சல், நெஞ்செரிச்சல், ஆஸ்துமா, ஒவ்வாமை மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் முதல் இரண்டு மாதத்திற்கு இதனை சாப்பிடக்கூடாது.
அப்படி அதிகம் பழுக்காத பப்பாளியை சாப்பிட்டால் அதில் உள்ள பால் கருக்கலைப்புக்கு வழிவகுக்கும். மேலும் பப்பாளிக்காயை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று வலி ஏற்படும். பப்பாளி விதையில் உள்ள கார்பைன் என்ற நார்ச்சத்து நாடித்துடிப்பு அதை குறைப்பது மட்டுமல்லாமல் நரம்பு மண்டலத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பப்பாளி பழத்தில் விட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது.
அது உயர்ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் திகழ்கிறது. இருந்தாலும் அதனை குழந்தைகள் ஒரு நாளைக்கு 1,500 மில்லி கிராமுக்கு அதிகமாகவும், பெரியோர்கள் 2000 மில்லி கிராமுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது சிறுநீரக கல் உருவாகும். அதுமட்டுமன்றி அளவுக்கு அதிகமாக பப்பாளியை சாப்பிட்டால் இரைப்பை மற்றும் குடல் பிரச்சினைகள் ஏற்படும். அதனால் இதனை குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது.