முதியவர் பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பாலக்காடு பகுதியில் வேலுச்சாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே நடந்த விவரத்தை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசாரிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வேலுச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அந்த முதியவர் 10 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்பிறகு இந்த வழக்கானது திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய எதற்காக தாமதமானது என்று குணசேகரன் எம்.எல்.ஏ போலீசாரிடம் கேட்டபோது, ஆன்லைன் சர்வர் பிரச்னையால் வழக்கு பதிவு செய்ய தாமதம் ஆகியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வேலுச்சாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.