தமிழகத்தில் பயிர்க்கடனை தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுக்கள் வழங்கிய கடனை தள்ளுபடி செய்வது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த சில மாதங்களாக அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது.
அதன்படி விவசாயிகளின் பயிர்க்கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்த நிலையில், தற்போது மகளிர் சுய உதவி குழுக்கள் வழங்கிய கடனை தள்ளுபடி செய்தது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2011 முதல் 2020 ஆம் ஆண்டு வரை 4.28 லட்சம் குழுக்களுக்கு ரூ.8,017 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கடனை ரத்து செய்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்களுக்கு எவ்வளவு கடன் தொகை வழங்கப்பட்டது என்ற விபரங்களை கூட்டுறவுத்துறை பெற்று வருவதாக தெரிகிறது. அதனால் மகளிர் சுய உதவி குழுக்கள் வழங்கிய கடன் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.