தமிழகத்தில் உதவிப்பேராசிரியர் நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் உதவி பேராசிரியர்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உதவி பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும் என யுஜிசி விதி உள்ளது. எனவே அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் உதவி பேராசிரியர்களாக நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்று பாண்டியம்மாள் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு விசாரணையில் உதவிப் பேராசிரியர்களாக நியமனம் சான்றிதழ் சரி பார்த்து கை இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.