சேலம் மாவட்டம் எடப்பாடி அஞ்சல் நிலையத்தில் இன்றும், நாளையும் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
ஆதார் என்பது ஒரு தனி மனித அடையாள அட்டையாகும். செல்போன் சிம் வாங்குதல், வாங்கி கணக்கு, பான் இணைப்பு ஆகியவற்றிக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறவும் ஆதார் அவசியம். இவ்வளவு முக்கியமான ஆதாரில் எதாவது திருத்தம் செய்ய வேண்டுமானால் அலைய வேண்டியது உள்ளது. இதற்காக UIDAI அமைப்பு பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அஞ்சல் நிலையத்தில் இன்றும், நாளையும் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் தொலைபேசி எண், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட திருத்தம் செய்ய ரூபாய் 50 கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் புதிதாக ஆதார் பதிவு செய்யும் நபர்களுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்க படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.