தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற 700 அரசு பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் அவ்வப்போது தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது வழக்கம். அரசும் அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி வருகின்றது. இந்நிலையில் சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற 700 அரசு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பேரணியாக செல்ல முயன்றனர். இதனால் சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட நான்கு பிரிவுகளில் 700 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.