Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் தூக்கிலிடப்படும் முதல் பெண்… “என் தாயை மன்னியுங்கள்”… ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்த சிறுவன்…!!

உத்திரபிரதேசத்தில் தன் குடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொன்ற பெண்ணின் மகன் தன் தாயின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷப்னம் அலி என்பவர் தன் குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள்,மைத்துனர், உறவினர், 10 மாத குழந்தை போன்ற ஏழு பேரை கொலை செய்ததாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவரின் மகன் முஹம்மத் தாஜ் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு, “என் தாய்க்கு மரண தண்டனை வழங்காமல் மன்னித்து விடுங்கள்” என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதாவது ஷப்னம் அலி, சலீம் என்பவரை காதலித்து வந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களின் திருமணத்திற்கு சம்மதிக்காததால் மன விரக்தி அடைந்த இருவரும் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களையும் கொலை செய்ய முடிவு எடுத்துள்ளனர். இதன்படி கடந்த 2008 ஆம் வருடத்தில் ஏப்ரல் 15ஆம் தேதியன்று ஷப்னம் தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்துள்ளார்.

அதன் பிறகு காவல்துறையினரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக அடையாளம் தெரியாத நபர்களால் தன் வீடு தாக்கப்பட்டது என்று கூறியுள்ளார். எனினும் காவல்துறையினரின் தொடர் விசாரணையால் ஷப்னம் மாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 2010 ஆம் வருடத்தில் சப்னம் அலி மீது குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. அதன்பிறகு மரணதண்டனையை ரத்து செய்யுமாறு ஜனாதிபதிக்கு கருணை மனு ஒன்றை கோரியிருந்தார்.

அந்த மனு நிராகரிக்கப்பட்டதால் தற்போது அவரின் மகன் தன் தாயின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மேலும் ஷப்னம் குற்றம்சாட்டப்பட்ட போது அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். மேலும் அவருடன் காதலர் சலீமும் இருந்ததால் அவரும் குற்றம் சாட்டப்பட்டார். அதன் பிறகு ஷப்னம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால் பிறந்த குழந்தைகள் 6 வருடங்கள் வரை சிறையில் இருக்க முடியாது. எனவே அவரின் மகன் முகமத் தாஜ் வளர்ப்பு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

தற்போது 12 வயதாகும் ஷப்னமின் மகன் முஹம்மத் தாஜ் தன் தாயை பற்றி கூறியிருப்பதாவது, என் தாயை நான் சந்திக்கும் போதெல்லாம் அவர் என்னை கட்டி பிடித்துக்கொள்வார். நீ என்ன செய்கிறாய்?, எப்படி இருக்கிறாய்?, பள்ளி எப்போது திறக்கிறது? எப்படி படிக்கிறாய்? உன் வளர்ப்பு தந்தை மற்றும் தாயை தொந்தரவு செய்யாமல் தானே இருக்கிறய் என்றெல்லாம் என்னிடம் கேட்பார் என்று வருத்தமுடன் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் பெண் தூக்கிலிடப்படுவது இதுவே முதல் முறையாகும். ஒரு பெண்களுக்கான மரண தண்டனை அறை ஒன்று மட்டுமே இந்தியாவில் உள்ளது. தற்போது வரை பெண்கள் யாரும் இதில் தூக்கிலிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |