Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மகளைத் துடிதுடிக்க கொன்று… தந்தை தற்கொலை… நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மகளை கழுத்தை அறுத்து கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த தாதாபுரம் ஊராட்சியை சேர்ந்த ஆதிகாட்டுர் பகுதியில் வசித்து வருபவர் கோபால் (54) மனைவி மணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் .மகள் பிரியா (15 ) மகன் கண்ணன். கோபால் அப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தள்ளுவண்டி மூலம் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். மனைவி மணி கரும்பு வெட்டும் பணிக்காக வெளியூர் வேலைக்கு சென்றிருந்தார். கண்ணன் வெளியூரில் உள்ள ஒரு பேக்கரியில பணிபுரிகிறான். மகள் பிரியா அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். நேற்று இரவு பிரியாவும் கோபாலும் வீட்டில் இருந்தார்கள். அப்பொழுது பிரியாவுக்கும் கோபாலுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திடீரென இன்று காலை கோபால் தன் வீட்டின் முன் பிணமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோபாலின் உடலில் பலத்த காயங்கள் இருந்தது. வீடும் பூட்டி இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது கோபாலின் மகள் பிரியா பலத்த காயத்துடன் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக இறந்து கிடப்பதை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்தார்கள். பிரியாவின் அருகில் கத்தி மற்றும் சுத்தியல் கிடந்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக எடப்பாடி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்து வந்து கோபால் பிரியா ஆகியோர்களின் உடல்களை உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச்சம்பவம்  குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீஸ் விசாரணையில் பிரியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கோபால்  தன் வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கோபால் சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அதனால் மகளை அவரே கொலை செய்தாரா? அல்லது மர்ம நபர்கள் யாராவது தந்தை மற்றும் மகள் இருவரையும் கொலை செய்து விட்டார்களா? என போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கோபாலின் நெருங்கிய உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்திற்கு சங்ககிரி டி.எஸ்.பி மற்றும் இன்ஸ்பெக்டர் போன்றவர்கள் வந்து சோதனையிட்டனர் . கொலை நடந்த இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்தபடி அப்பகுதியை சுற்றி வந்தது ஆனால் நாய்  யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கணவன் மற்றும் மகள் இறந்ததை அறிந்து வந்தா மனைவி மணி சம்பவ இடத்திலேயே கதரி அழுதார்.தந்தை மகள் இருவரும்  கொலை செய்யப்பட்ட  பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Categories

Tech |