நடிகர் சிம்பு வாரணாசியில் வழிபாடு செய்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிம்பு பல தமிழ் திரைப் படங்களில் நடித்து பிரபலமானவர் ஆவார். இந்நிலையில் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சில வருடங்களாக விலகி இருந்தார். இதையடுத்து சிம்பு சமீபகாலமாக பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய உடல் எடையை குறைத்து முன்பு இருந்தது போல அழகாக மாறிவிட்டார். இதையடுத்து சிம்பு அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும், விடீயோக்களையும் வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் நடிகர் சிம்பு வாரணாசியில் வழிபாடு செய்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடவுள் நம்பிக்கை உள்ள நடிகர் சிம்பு அடிக்கடி இமயமலைக்கு செல்வது வழக்கம். அதுபோல தற்போது கங்கை நதிக்கரையில் கையில் விளக்குடன் உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. சிம்பு கடவுளிடம் என்ன வேண்டி இருப்பார்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.