இரண்டாவது திருமணம் செய்த கணவனின் நடவடிக்கை பிடிக்காததால் மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நந்தகுமார் தனது 35 வயது வரை திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மைதிலி என்ற 20 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வயிற்றுவலி என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நந்தகுமார், தான் சாப்பிட்ட உணவு கசந்ததாகவும் அதுமட்டுமின்றி தான் வயலுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்து வாசனை அடித்ததாகவும் கூறினார். அதேபோல் நந்தகுமார் விஷம் சாப்பிட்டு தான் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை போலீசார் வழக்குப்பதிவு செய்து, யார் நந்தகுமாருக்கு விஷம் வைத்தது என்ற கோணத்தில் நடத்திய விசாரணையில் அவரது கர்ப்பிணி மனைவி மைதிலி தான் இந்த கொடூரமான செயலை செய்தது தெரியவந்தது . இதனையடுத்து நந்தகுமாரின் மனைவியிடம் நடத்திய விசாரணையில் பல விஷயங்கள் வெளிவந்துள்ளது. அந்த வாக்குமூலத்தின்படி, ஏற்கனவே மைதிலிக்கு 15 வயதில் திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்துள்ளார். பின்னர் தனது 20 வயதில் நந்தகுமாரை திருமணம் செய்து கொண்டார் .
ஆரம்பத்தில் நந்தகுமார் மனைவியுடன் தாம்பத்திய உறவில் மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார். பின்னர் நண்பரின் ஆலோசனைப்படி, மருத்துவரை சந்தித்து அவர் அளித்த மாத்திரைகளை சாப்பிட்ட பின் மைதிலி கர்பமானதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இரவு பகலாக நந்தகுமார் மைதிலிக்கு தொல்லை கொடுத்து வந்தார். கணவனின் இந்த செயல் பிடிக்காத மைதிலி நந்தகுமாரை கொலை செய்ய முடிவெடுத்து வயலுக்கு வாங்கி வைத்த பூச்சி கொல்லி மருந்தை உணவில் கலந்து கொடுத்துவிட்டார்.
இதனையடுத்து போலீசார் மைதிலியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மைதிலி நந்தகுமாரை திருமணம் செய்வதற்கு முன்பே வேறுஒருவருடன் ரகசியமான தொடர்பில் இருந்ததாகவும், இதனால்தான் உடனடியாக நந்தகுமாருக்கும் மைதிலிக்கும் திருமணம் செய்து வைத்ததாக உறவினர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.