சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகமான மக்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவதற்கு அதன் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி
0 – 2 கிமீ வரை கட்டணத்தில் மாற்றமில்லை.
2- 4 கிமீ வரை கட்டணம் ரூ. 20 ஆக உள்ள நிலையில், இனி 2- 5 கிமீ வரை கட்டணம் ரூ. 20 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 -6கிமீ வரை, 6 முதல் 12 கிமீ வரை கட்டணம் ரூ.30 ஆகவும்,இருந்த நிலையில் இனி, 5 – 12 கிமீ வரை கட்டணம் ரூ.30 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 முதல் 18 கிமீ வரை கட்டணம் ரூ. 50 ஆக இருந்த நிலையில் இனி 12 -21 கிமீ வரை கட்டணம் ரூ.40 என வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
18 -24 கிமீ வரை கட்டணம் ரூ.60, 24 கிமீ மேல் கட்டணம் ரூ.70 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 21 -32 கிமீ வரை கட்டணம் ரூ.50 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
அனைத்து பயணச்சீட்டுகளுக்கும் அடிப்படை கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் கட்டணத்தில் இருந்து 50 சதவீத தள்ளுபடி.இந்த ஆணை வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்