Categories
உலக செய்திகள்

பூனைக்குள்ள இப்படி ஒரு திறமையா…? கின்னஸ் சாதனை செய்து அசத்தல்… வைரலாகும் வீடியோ….!!

ஆஸ்திரியாவில் பூனை ஒன்று கின்னஸ் சாதனை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரியாவில் Anika Moritz என்பவர் Alexis என்ற பெண் பூனையை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். இந்நிலையில் Alexis என்ற அந்தப் பூனை ஒரு நிமிடத்தில் அதிக அளவு தந்திரங்களை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. Anika Moritz கற்றுக்கொடுக்கும் தெளிவான வழிமுறையை பின்பற்றி Alexis யாரும் நம்ப முடியாத அளவிற்கு 26 தந்திரங்களை செய்து அசத்தியுள்ளது.

12 வார குட்டியாக இருந்தபோதே Anika Moritz  பூனைக்கு  தந்திரங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார். இப்போது  Alexis- ற்கு எட்டு வயது நிரம்பியுள்ளது. ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் அவர் கூறும் 26 கட்டளைகளுக்கு தந்திரங்களை செய்து Alexis அசத்தியுள்ளது.  Alexis -ன் இந்த கின்னஸ் வீடியோவானது அனைவராலும் ரசிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Categories

Tech |