தலையணையால் அமுக்கி பச்சிளம் குழந்தையை மூதாட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். அவர் விவசாயம் பார்த்து வந்துள்ளார். இவருக்கு சிவபிரியங்கா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இதையடுத்து சென்ற வாரம் இந்த தம்பதிகளுக்கு பழனிபாப்பம்பட்டி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. சில நாட்களுக்கு முன் அந்த குழந்தை பேச்சு மூச்சு இல்லாத நிலையில் இருந்துள்ளது.
அதை கண்ட குழந்தையின் பெற்றோர் உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு அந்த குழந்தை ஏற்கனவே இறந்துள்ளது தெரியவந்தது.மேலும் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் முகத்தில் இருந்த கீறல்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின் அந்த குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உசிலம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மூதாட்டி நாகம்மாள் குழந்தையின் முகத்தில் தலையணையால் அமுக்கி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து உசிலம்பட்டி காவல்துறையினர் நாகம்மாள் மீது வழக்குபதிந்து பின் கைது செய்தனர். இந்த பெண் சிசு கொலை சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.