கர்நாடகாவின் டெக்கான் நகர கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவின் டெக்கான் நகர கூட்டுறவு வங்கி லிமிடெட் ரிசர்வ் வங்கியால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் பிப்ரவரி 19ஆம் தேதி மாலை வெளியிடப்பட்டது. அதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆறு மாதங்கள் அமலில் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி உத்தரவின்படி டெக்கான் நகர கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்கள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் திரும்ப பெற முடியாது. இது அனைத்து கணக்குகளுக்கும் பொருந்தும். அனைத்து விதமான கணக்குகளுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும்.
அதுமட்டுமன்றி இந்த தடை 6 மாதங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. வங்கியின் நிதி நிலை மறு ஆய்வு செய்யப்பட்ட பிறகு முடிவு எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இனி வாடிக்கையாளர்களுக்கு புதிய கடன்களை வழங்க கூடாது என வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தவிர இனி பணம் வங்கியில் டெபாசிட் செய்யவும் முடியாது. வங்கியில் பணம் நிலையை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி இந்த முடிவை வெளியிட்டுள்ளது. அந்த வங்கியின் அனைத்து பரிவர்த்தனைகளும் ஆராய்ச்சி செய்யப் படுகின்றன. வங்கி மூழ்கும் ஆபத்து ஏற்படாத வகையில் வைப்புத் தொகை மற்றும் திரும்ப பெறுதல் ஆகியவற்றிற்கு இடையில் சமநிலையை நிலை நிறுத்துவதே ரிசர்வ் வங்கியின் மிகப்பெரிய முயற்சி.
பொதுமக்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது. ஆனால் அவர்களின் சொந்த விருப்பப்படி பணத்தை எடுக்க முடியாது. எந்த ஒரு வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என ரிசர்வ் வங்கி, வங்கி வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் வங்கி மூழ்கினால் அதன் வாடிக்கையாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைக்கும் என மோடி அரசு கூறியுள்ளது. உங்கள் கணக்கில் 5 லட்சத்திற்கும் குறைவாக பணம் இருந்தால் உங்கள் பணம் அனைத்தும் பாதுகாப்பானது. ஆனால் ஐந்து லட்சத்திற்கும் மேல் பணம் இருந்தால் அதில் 5 லட்சம் மட்டுமே உங்களுக்குக் கிடைக்கும். இந்த திடீர் அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.