கர்நாடகாவில் 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியான தகவல் அரசு மத்தியில் உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் காரணமாக அதிருப்தியடைந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் 12 எம்எல்ஏக்கள் நேற்று திடீரென பதவியை ராஜினாமா செய்தனர்.இதனால் ஆட்சி கவிழக்கூடிய அபாயம் எழுந்த நிலையில்,
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக குமாரசாமி அரசிற்கு நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், எம்எல்ஏக்களை தக்க வைத்துக் கொள்வதற்காக காங்கிரஸ்,மதசார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் குமாரசாமி இன்று மாலை எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்எல்ஏக்களும் பாஜக உடன் தொடர்பில் இருப்பதாகவும், கர்நாடகாவில் நடைபெறும் அரசியல் திருப்பத்தை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இது கர்நாடகாவில் உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.