நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் படமான அத்ராங்கி ரே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் ,கர்ணன் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . இவர் தற்போது கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துள்ளார் . மேலும் தனுஷ் பாலிவுட்டில் பிரபல நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து ‘அத்ராங்கி ரே’ படத்தில் நடித்துள்ளார் . இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக சாரா அலிகான் நடித்துள்ளார் .
6th august 2021 @aanandlrai and @arrahman’s #AtrangiRe THEATRICAL RELEASE pic.twitter.com/6BoRNsJimh
— Dhanush (@dhanushkraja) February 19, 2021
இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் . முதலில் இந்த படம் 2021-ல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது . இதன்பின் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போனது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர் . அதன்படி ‘அத்ராங்கி ரே ‘ படம் வருகிற ஆகஸ்ட் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.