Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அப்போ நாங்க என்ன பண்ணுறது… கால்நடைகளுக்கு வழங்குவதாக குற்றசாட்டு… மாணவர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

அரசு விடுதியில் சரியாக உணவு வழங்கப்படாததால் கோபம் அடைந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திட்டகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் திட்டக்குடியில் உள்ள அரசுக்கு சொந்தமான ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி உள்ளனர். இந்நிலையில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டும் உணவு கொடுத்து விட்டு மீதமுள்ள உணவை கால்நடைகளுக்கு கொட்டியதாக விடுதி ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் விடுதியில் தங்கியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதி முன்பு அமர்ந்து விடுபடாமல் உணவு வழங்க கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திட்டகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சரியான முறையில் அனைத்து மாணவர்களுக்கும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

Categories

Tech |