புதன்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் 1 கோடி 17 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை தோறும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் பருத்தி சந்தை நடைபெறுவது வழக்கம். அவ்வாறு கடந்த புதன்கிழமையும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் 5232 பருத்தி மூட்டைகளுடன் 854 விவசாயிகள் விற்பனைக்காக வந்துள்ளனர். இதில் சத்தியமங்கலம், அன்னனூர், மகுடஞ்சாவடி, ஆத்தூர், புளியம்பட்டி, கொங்கணாபுரம், விழுப்புரம், திருப்பூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த விவசாயிகள் பருத்தியை கொள்முதல் செய்துள்ளனர்.
இதில் ஒரு குவிண்டால் பருத்தி ரூபாய் 1714 பருத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விற்பனையின் மூலம் ரூபாய் 1 கோடி 17 லட்சத்து பருத்தி விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க இயக்குனர் சஞ்சீவி தெரிவித்துள்ளார்.