மக்கள் நீதி மைய கட்சியின் சகோதரர் கமல்ஹாசன் நடிகர் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார். 40 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து கமல்ஹாசன் விசாரித்ததாகவும்,சமகால அரசியல் குறித்து பேசியதாகவும் மக்கள் நீதி மையம் கட்சியின் நான்காவது ஆண்டு விழாவிற்கு ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.