Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரத யாத்திரை நடத்த போறோம்… நிபந்தனையுடன் கூடிய அனுமதி… மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

மதுரை உயர்நீதிமன்றம் ரத யாத்திரை நடத்த நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்குமாறு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்திலுள்ள செல்வகுமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது “அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இருப்பதால் அதற்காக நிதி திரட்ட மதுரையில் ரதயாத்திரை மேற்கொள்ள அனுமதி வேண்டும்” என  குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்குமாறுகாவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி மதுரையில் 100 வார்டுகளில் ரதயாத்திரை நடத்தலாம் மற்றும் கொரோனா பரவல் காரணமாக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் போன்ற விதிமுறைகளை உள்ளடக்கி அனுமதி வழங்கியுள்ளார்.

Categories

Tech |