Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர் பிரிந்த ஏக்கம்… கல்லூரி மாணவருக்கு நடந்த சோகம்… தனியாக தவிக்கும் தாத்தா…!!

தனது பெற்றோர் பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அழகம்மாள் நகரில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அவினாஷ் பேரன் இருக்கின்றான். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். இவரின் பெற்றோர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றதால் அபினாஷ் தனது தாத்தா வீட்டில் வளர்ந்தார். மேலும் தனது பெற்றோர் பிரிந்து சென்றதால் அவினாஷ் எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த அவினாஷ் அறைக்குள் சென்று நீண்ட நேரம் ஆகியும் கதவைத் திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த ராமலிங்கம் அறைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது அவினாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கோயம்பேடு பொலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |