நிலக்கோட்டை அருகே தனது ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை கள்ளக் காதலர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்துள்ள குரும்பபட்டியில் சுரேஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது. இவர் புகைப்பட கலைஞராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். நிலக்கோட்டை சேர்ந்த தம்பதியர் பொன்ராஜ் ரதிதேவி (28). நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் புதுவாழ்வு திட்டத்தில் தற்காலிகமாக ரதிதேவி பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகத்திற்கு புகைப்படம் எடுப்பதற்காக சுரேஷ் சென்றிருந்தார். அப்பொழுது ரதிதேவிக்கும் சுரேஷுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காலப்போக்கில் கள்ளக் காதலாக மாறிவிட்டது. சுரேஷின் கள்ளக்காதல் அவரது மனைவிக்கு தெரிந்ததும் சுரேஷிடம் சண்டையிட்டு தன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி சென்ற பின்னும் சுரேஷ் ரதிதேவியுடன் கொண்ட கள்ளக்காதலை தொடர்ந்து கொண்டிருந்தார்.
அதன்பிறகு சுரேஷ் தனது மோட்டார் சைக்கிளில் ரதிதேவியை வத்தலகுண்டில் உள்ள வெறியப்பநாயக்கன்பட்டியில் உள்ள காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்றார். ரதிதேவியை சுரேஷ் தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். ரதிதேவி அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. அதனால் கோபமடைந்த சுரேஷ் பக்கத்தில் கிடந்த கல்லை தூக்கி ரதிதேவியின் தலையில் போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார். மேலும் ரதிதேவி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் வத்தலகுண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அப்பொழுது சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று ரதிதேவியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் ரதிதேவி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில் சுரேஷ் எப்படியும் போலீசில் கள்ளக்காதலியை கொன்றதால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து குரும்பபட்டி கண்மாய் பகுதியில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். பிறகு சுரேஷை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.