Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

5 மாத கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை… விஷம் கொடுத்து கொன்ற மனைவி… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

ஐந்து மாத கர்ப்பிணியான தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மனைவி கணவருக்கு விஷம் கொடுத்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காளியண்ணன் தோட்டம் பகுதியில் நந்தகுமார் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெரியமோலபாளையம் பகுதியில் வசித்துவரும் மைதிலி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது, இந்நிலையில் தனது தோட்டத்திற்கு சென்று பயிருக்கு மருந்து தெளித்து விட்டு வீட்டிற்கு வந்த நந்தகுமார் உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அந்த உணவு கசப்பாக இருந்து உள்ளது.

இதனால் அதனை கீழே கொட்டிவிட்டு கூலி வேலைக்கு புறப்பட்டு அங்கு தான் கொண்டு சென்ற மதிய உணவை சாப்பிடும் போது அதுவும் கசிந்துள்ளது. இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நந்தகுமாருக்கு அங்கு  அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில் அந்தியூர் கிராம நிர்வாக அதிகாரி முருகானந்தத்திடம், நந்தகுமாருக்கு விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக அவருடைய மனைவி மைதிலி சரண் அடைந்ததால், மைதிலியை அவர் அந்தியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார். அப்போது நடத்திய விசாரணையில் நந்த குமாருக்கு ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி நான்கு மாதத்திலேயே அவரது மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றதாகவும், விவாகரத்து பெற்றதும் தெரிய வந்துள்ளது. இதனால் மைதிலியை இரண்டாவதாக திருமணம் செய்து நன்றாக குடும்பம் நடத்தி வந்த நந்தகுமார் குடும்பம் நடத்துவதில் ஆர்வம் குறைவாக இருந்ததாக அந்தியூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அந்த சிகிச்சைக்குப்பின் நந்தகுமார் 5 மாத கர்ப்பிணியாக உள்ள மைதிலிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதனை தாங்கமுடியாத மைதிலி இதுகுறித்து நந்தகுமாரிடம் கூறியும் அவர் அதனை கண்டுகொள்ளாமல் அதிகமாகவே பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த மைதிலி அவர் சாப்பிடும் உணவில் விஷம் கலந்து கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் மைதிலியை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Categories

Tech |