Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைத்து… ஸ்லிம்மா தெரியனுமா ? அப்போ இந்த ரெசிபி ஒண்ணு போதும்… ட்ரை பண்ணி பாருங்க..!!

கத்திரிக்காய் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய்                   – 5
வெங்காயம்                     – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள்                  – 1 டீஸ்பூன்
மல்லி தூள்                       – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்                     – 1/2 டீஸ்பூன்
தக்காளி                               – 2 (நறுக்கியது)
அரைத்த தக்காளி          – 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை                             – 1/2 டீஸ்பூன்
உப்பு                                      – தேவையான அளவு
சீரகம்                                    – 1 டீஸ்பூன்
பிரஷ் க்ரீம்                        – 3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை    – ஒரு கொத்து
எண்ணெய்                        – தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி தழை, இஞ்சி,  பூண்டை சிறு துண்டுகளாகவும், கத்திரிக்காயை சுத்தம் செய்து, நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பின்பு மிக்சிஜாரில் நறுக்கிய இஞ்சி, பூண்டை போட்டு நன்கு மையாக பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும். அதே மிக்சி ஜாரில் தக்காளி போட்டு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

பின்பு நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் பொரிக்க தேவையான அளவஎண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய கத்திரிக்காய் துண்டுகளை போட்டு நன்கு வேக வைத்து, பொன்னிறமாக பொரித்து, ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.

பின்பு அதே நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் போட்டு தாளித்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கியபின், அதனுடன் அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து சில நிமிடம் நன்கு  வதக்கவும்.

பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியையும், அரைத்த தக்காளியையும் போட்டு,தேவையான அளவு உப்பு, சர்க்கரை தூவி  சில நிமிடம் நன்கு பிரட்டி விடவும்.

மேலும் பிரட்டி விட்ட கலவையை  சில நிமிடம் கொதிக்க வைத்து, அதில் பொரித்து வைத்துள்ள கத்திரிக்காய் துண்டுகளை போட்டு கரண்டியால் நன்கு கிளறி விட்டபின், அதில் தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்தது கொள்ளவும்.

இறுதியில் கொதிக்க வைத்த கலவையானது நன்கு கெட்டியானதும், அதனுடன் பிரஷ் க்ரீம்மை சேர்த்து லேசாக பிரட்டியதும், அதில் நறுக்கிய கொத்தமல்லிதழையை தூவி அலங்கரிது இறக்கி வைத்து பரிமாறினால், ருசியான கத்திரிக்காய் வறுவல் ரெடி!!!

Categories

Tech |