Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என் அண்ணனை போல இருக்கணும்… ஆசையாய் ஊருக்கு வந்த வாலிபர்… திடீரென நடந்த துயர சம்பவம்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மங்கலாபுரம் 12வது தெருவில் தர்மர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வம் முருகன் என்ற மகன் உள்ளார். இவர் மயிலோடை பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்துள்ளார். இவருடைய அண்ணனான சுடலைமணி என்பவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது அண்ணனை போல் கார் ஓட்ட வேண்டும் என்று ஆசைப்பட்ட செல்வமுருகன் மோட்டார் சைக்கிளில் குறும்பூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தூத்துக்குடிக்கு தனித்தனி மோட்டார் சைக்கிளில் செல்வம் முருகனுக்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக சகோதரர்கள் புறப்பட்டுள்ளனர்.

இவர்களது மோட்டார் சைக்கிள் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் செல்வம் முருகனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வமுருகன் படுகாயம் அடைந்ததை பார்த்ததும் கார் டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். அதன்பின் செல்வ முருகனை அருகில் உள்ளவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் செல்வ முருகன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலையத்தில் செல்வ முருகன் அண்ணன் சுடலைமணி புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கார் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |