Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கோவில்களில் திருவிழாக்கள் நடத்த…. மதகுருமார்களின் ஆலோசனைக் கூட்டம்…. ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்…!!

கோவில்களில் திருவிழாக்கள் நடத்துவது குறித்து விவாதிக்க மதகுருமார்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக ஐகோர்டில் அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெற உள்ள திருவிழாக்களை நடத்துவது தொடர்பாக மதகுருமார்கள் அடங்கிய குழுவை அமைத்து முடிவெடுக்க வேண்டுமென திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி வரும் ஜூலை வரை ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெற உள்ள திருவிழாக்கள்  நடத்துவது குறித்து மதகுருமார்கள் உடன் கலந்து ஆலோசித்து அறிக்கையை  அளிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் ஸ்ரீரங்கம் கோவிலில்  திருவிழாக்கள் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டத்தை வருகிற 22ஆம் தேதி சென்னையில் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.இதனையடுத்து கோவில் அறங்காவலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஸ்ரீரங்கத்தில் உள்ள நிலையில் சென்னையில் இந்த கூட்டம் நடைபெற்றால் அதில் கலந்து கொள்வதில் சிரமம் ஏற்படும் என மனுதாரர் சார்பில்  தெரிவித்துள்ளனர்.

இதனால் உயர் நீதிமன்றம் இந்த ஆலோசனைக் கூட்டத்தை காணொளிக்காட்சி வாயிலாகவும், நேரிலும் நடத்தப்பட வேண்டும் என அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நேரிலும் ஆன்லைன் மூலமாகவும் கலந்துகொள்ளலாம். இக்கூட்டத்தின் ஆன்லைன் முகவரி இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கூறி  விசாரணையை வருகிற ஏப்ரல் 9-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Categories

Tech |