உடல்நிலை சரியில்லாத விரக்தியில் கல்லூரி மாணவி குளிர்பானத்தில் சாணி பவுடர் கலந்து குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தட்டாம் புதூர் பகுதியில் குமார் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த கௌரி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சாணி பவுடரை குளிர்பானத்தில் கலந்து குடித்து விட்டார்.
இதனையடுத்து மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கௌரி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.