Categories
தேசிய செய்திகள்

5 மணிநேரத்திற்கு 1… வெளியான பெரும் அதிர்ச்சி தகவல்… OMG…!!!

டெல்லியில் சுமார் 5 மணி நேரத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவாகிறது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடுரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள். நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தினம்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு கணக்கின்படி டெல்லியில் சுமார் 5 மணி நேரத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவாகிறது என டெல்லி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 19 மணி நேரத்திற்கு ஒரு கொலை வழக்கு பதிவாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் தலைநகரில் இது போன்ற அவல நிலை ஏற்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

Categories

Tech |