Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன ஆச்சுன்னு தெரியல… மிதந்த மூதாட்டியின் சடலம்… அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…!!

உடல்நிலை சரியில்லாததால் மனமுடைந்த மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீலேப்பள்ளி கிராமத்தில் அச்சப்பன் என்பவரது மனைவியான சீதம்மா என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பெங்களூர் மற்றும் ஓசூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மனமுடைந்த மூதாட்டி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் மூதாட்டியை அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்த போது, கிருஷ்ணர் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் மூதாட்டி சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |