‘டாக்டர்’ படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’ . இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமர் இயக்கியுள்ளார் . இந்தப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் வினை, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . இந்தப் படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது .
Are you guys ready for the next song from #Doctor ? 😀 @Siva_Kartikeyan @Nelsondilpkumar
— Anirudh Ravichander (@anirudhofficial) February 19, 2021
ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற செல்லம்மா செல்லம்மா பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘டாக்டர் படத்தின் அடுத்த பாடலை கேட்க ரெடியா?’ என பதிவிட்டுள்ளார் . இந்தப் புதிய பாடலை கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர் .