Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பெற்ற மகள் என்று கூட பார்க்காமல்…. ஜவுளி வியாபாரி செய்த கொடுமை… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் 44 வயதான ஜவுளி வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 14 வயதில் மகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது மனைவி வெளியே சென்ற சமயத்தில் பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் அவர் அந்த சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கூடலூர் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் ஜவுளி வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஜவுளி வியாபாரி தனது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டு சிறையும் விதித்து நீதிபதி  அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் அபராதமாக 10 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் எனவும், அபராத தொகையை கட்ட தவறினால் மீண்டும் கூடுதலாக 5 வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.

Categories

Tech |