கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள முள்ளம்பட்டி ஓலப்பாளையம் பகுதியில் மாணிக்கம் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்தாயம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களுடைய மகன்களுக்கு திருமணம் ஆனதால் அவர்கள் வெளியூரில் வாழ்ந்து வருகின்றனர். எனவே ஓலப்பாளையம் பகுதியில் கணவன் மனைவி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கண்ன வேலம்பாளையம் பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்ற மாணிக்கம் மயங்கி விழுந்து அங்கேயே இறந்து விட்டார். அவ்வழியாக சென்ற மாணிக்கத்தின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சுப்பிரமணியம் என்பவர் மாணிக்கம் இறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனை கேட்டதும் முத்தம்மாள் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.