நீங்கள் எங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய அண்ணன் என்று தல தோனியை கேப்டன் விராட் கோலி புகழ்ந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்
இன்று தல தோனி தனது 38-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளை தமிழகம் முதல் உலகம் வரையில் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் தோனியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு 6 ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் ஆக்கி வாழ்த்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். தோனிக்கு நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தல தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் மஹி. நம்பிக்கை மற்றும் மரியாதையின் அர்த்தத்தை மிகச் சிலரே புரிந்துகொள்கிறார்கள். உங்களுடன் பல ஆண்டுகளாக நான் வைத்திருந்த நட்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் எங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய அண்ணனாக இருந்தீர்கள், நான் முன்பு கூறியது போல், நீங்கள் எப்போதும் என் கேப்டன்” என்று கூறினார்.
Happy birthday mahi bhai @msdhoni. Very few people understand the meaning of trust and respect and I'm glad to have had the friendship I have with you for so many years. You've been a big brother to all of us and as I said before, you will always be my captain 🙂 pic.twitter.com/Wxsf5fvH2m
— Virat Kohli (@imVkohli) July 7, 2019