தமிழகம் முழுவதிலும் ஓட்டுநர் பணிக்கான சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் ஓட்டுனர் திறன் தேர்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 32 ஓட்டுனர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் ஓட்டுநர் திறன் தேர்வு வருகிற பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 1, 2ஆகிய தேதிகளில் 32 மாவட்டங்களில் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் அறிவித்துள்ளது.
இதற்கு விருப்பமுள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கு விண்ணப்பித்தவர்கள் http://tnuwwb.tn.gov.in/ மற்றும் http://labour.tn.gov.in என்ற இணையத்தில் சென்று அழைப்பு கடிதத்தை பெறலாம்.