Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்க குழந்தை சளி, இருமலால் அவதிப்படுகிறதா…? கவலைப்படாதீங்க. இந்த மருத்துவம் உங்களுக்கு உதவும்…!!

கை குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் குறைவாக இருக்கும். இதனால் அடிக்கடி அவர்களுக்கு உடம்பு சரி இல்லாமல் போகும். அவ்வாறு உடம்பு சரியில்லாமல் போகும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்றவை அடிக்கடி வரும். இதனால் மூச்சு விடுவதற்கு அவர்கள் சிரமப்படுவார்கள். இரவு நேரங்களில் அழுது கொண்டே இருப்பார்கள். வறட்டு இருமலால் அவதிப்படுவார்கள். இதற்கு வீட்டில் உள்ள சில மூலிகைகளை பற்றி இதில் பார்ப்போம்.

வீட்டு வைத்தியம்: 

ஆடாதொடை இலை, பூ, வேர், பட்டை ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. சித்த மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுகின்றது. நோய் குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது ஆடாதொடை இலையில் பாதி மட்டுமே கொடுத்து வந்தால் நல்லது. ஆடாதொடை இலையை நீரில் சுத்தம் செய்து அதனை இடித்து சாறு எடுத்து மூன்று துளிகள் மட்டும் தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் தடவ வேண்டும். இதனை மூன்று வேளை செய்தால் சளி, இருமல் சரியாகிவிடும்.

கல்யாண முருங்கை இலையை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்து அவற்றை கசக்கி சாறு எடுத்து அதனை தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளி, இருமல் சரியாகும்.

தூதுவளை இலையை சுத்தம் செய்து ஒரு வானொலி அடுப்பில் கால் தேக்கரண்டி நான்கில் ஒரு பங்கு நெய்யை விட்டு மூன்று தூதுவளை இலையை போட்டு வதக்கி அதன் சாறை எடுத்து குழந்தையின் நாக்கில் வையுங்கள் இரண்டு நாட்களில் நெஞ்சு சளி குறைந்து விடும்.

வல்லாரைக் கீரையை சூரணத்தில் ஒரு சிட்டிகை மட்டும் எடுத்து தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுங்கள் சளி இருமல் போகும்.

குழந்தைகளுக்கு சளி அதிகமாக இருக்கும் பட்சத்தில் தும்பைப் பூவை எடுத்து கால் தேக்கரண்டி அளவு தாளிசபத்திரி எடுக்கவும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இரண்டு ஆடாதொடை இலை ஆகியவற்றை சேர்த்து உரலில் இடித்து அவற்றின் சாற்றை எடுத்து வெள்ளைத் துணியில் வடிகட்டி தேன் கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தையின் நாக்கில் வைத்து வந்தால் சளி குணமாகும்.

பிறந்த குழந்தை முதல் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அனைவருக்கும் இது பொருந்தும்.

Categories

Tech |