Categories
உலக செய்திகள்

நீங்கள் தானே அறிவித்தீர்கள்… இதனை உடனடியாக செய்யுங்கள்… புதிய WTO தலைவர் பிரிட்டனிற்கு எச்சரிக்கை…!!

உலக சுகாதார அமைப்பின் புதிய தலைவர், பிரிட்டன் உடனடியாக உபரி தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உபரி தடுப்பூசிகளில் பெரும்பாலானவற்றை ஏழை நாடுகளுக்கு அளிப்பதாக வெள்ளிக்கிழமை அன்று ஜி-7 கூட்டத்தில் அறிவித்திருந்தார். உலக சுகாதார அமைப்பின் புதிய தலைவரான Ngozi Okonjo-Iwelea என்பவர் பிரிட்டன் பிரதமரின் முடிவை வரவேற்றிருக்கிறார்.

ஆனால் உபரி உள்ள வரை காத்திருக்காமல் அளிக்கவேண்டிய தடுப்பூசிகளை விரைவாக ஏழை நாடுகளுக்கு பிரிட்டன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக Ngozi Okonjo-Iwelea அவர் கூறியுள்ளதாவது, பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையேயான நன்மைகள் இணையான அணுகலை பெற்றிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பணக்கார நாடுகள் சில தன் நாட்டின் குடிமக்கள் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி அளித்துள்ளது.

எனினும் உலகம் முழுவதும் இருக்கும் நாடுகளில் 75% தடுப்பூசிகளை 10 நாடுகள் மட்டும் தான் செலுத்தியுள்ளன. மேலும் 30 நாடுகள் தற்போது வரை ஒரு டோஸ் கூட கிடைக்காமல் இருப்பதாக கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் வரலாற்றிலேயே முதல் ஆப்பிரிக்க மற்றும் முதல் பெண் தலைவர் Ngozi Okonjo-Iwelea தான். இவர் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி அன்று புதிதாக WTOவின் இயக்குனராக பதவி ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |