Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விஷம் கலந்த தண்ணீரை குடித்து…. “செத்து மடிந்த 6,000 கோழிகள்”… கன்னியாகுமரியில் நேர்ந்த சோகம்…!!

கோழி பண்ணையில் உள்ள தண்ணீர் டேங்கில் விஷம் கலந்த தண்ணீரை சுமார் 6 ஆயிரம் கோழிகள் குடித்ததால் இறந்தது.

கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளை அருகே வடக்குபுதூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவர் செண்பகராமன்புதூர் அருகே கோழி கடை வைத்து நடத்தி வருகிறார். மொத்தமாக கோழிகளை குமரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கோழிப்பண்ணையில் கோழிகளுக்கு தண்ணீர் அருந்துவதற்காகதண்ணீர் வைத்துள்ளார்.

ஆனால் தண்ணீரில் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் பிளீச்சிங் பவுடரை மர்மநபர்கள் யாரோ கலந்துள்ளனர். இந்த தண்ணீரை குடித்த சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் துடிதுடித்து உயிரிழந்தனர். விஷத்தை கலந்து யார் என்பது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |