மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பகல் நேர ஊரடங்கு அமல்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6000த்தை தாண்டிய நிலையில் தலைநகர் மும்பையில் 823 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தாராவியில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மீண்டும் வீடு வீடாக சென்று மாநகராட்சி ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்ய தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பகல் நேர ஊரடங்கு அமல்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் திரு அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே , பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தும் என்று மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார் . உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி உள்ளதாகவும், இது வேகமாக தோற்றக்கூடியது என்பதால் பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.