Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் கடைகளில்…. வெளியான அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்காது அட்டை என மொத்தம் ஐந்து ரேஷன் அட்டைகள் இருக்கின்றன. அதன்படி ஒரு கோடியே 96 லட்சத்து 16 ஆயிரம் குடும்பங்கள் ரேஷன் அட்டை பயன்பாட்டில் உள்ளனர். ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு ஒவ்வொரு கடைகளிலும் விற்பனையாளர், எடையாளர் என்று இருவர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் பல கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. ஆயிரம் அட்ட்டைதாரர்களுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை விரைவாக வழங்குவதற்காக கூடுதலாக ஒரு ஊழியர் நியமிக்குமாறு உணவு வழங்கல் துறை அறிவித்தது.

இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை நுகர்பொருள் வாணிபத்திற்கு சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுவரை ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. மேலும் தங்களுடைய பணிச்சுமையை சமாளிப்பதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களை ஊழியர்களாக நியமித்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமான செயல் என்பதால் பல்வேறு முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து தமிழக ரேஷன் கடையில் மத்திய குழு ஆய்வு செய்ய இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவு துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ரேஷன் கடைகளுக்குள் வெளி நபரை அனுமதிக்கக்கூடாது. வேலை நேரத்தில் அனைவரும் அடையாள அட்டை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். கடையை மிகவும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |