தன்னுடைய வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர் பாஜகவில் இணைந்ததால் வீட்டை காலி செய்யும்படி சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்தது . பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். தற்போது இந்தியளவில் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. வாரணாசியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா, உத்தர பிரதேச மாநிலத்தின் முதலவர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் அங்குள்ள வாரணாசி விமான நிலையத்தில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலை திறப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பல்வேறு திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேசத்தின் அலிகார் நகரில் வசித்து வரும் குலிஸ்தானா என்பவர் கலந்து கொண்டு தன்னை பா.ஜ.க.வில் இணைத்து கொண்டதாக சொல்லப்படுகின்றது. இந்த தகவலறிந்த குலிஸ்தானா_வின் வீட்டு உரிமையாளர் ஆத்திரமடைந்து குலிஸ்தானாவிடம் கடுமையாக நடந்து கொண்டதோடு , வீட்டை காலி செய்யும் படி சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.