பிரபல தொகுப்பாளர் தீபக் அவரது மனைவி, மகனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான கெட்டிமேளம், நிலா ,தென்றல் உள்ளிட்ட பல சீரியல்களில் கதாநாயகனாக கலக்கியவர் தீபக் . இவர் நடிகராக மட்டுமல்லாது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமான இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார் .
தீபக் கடந்த 2008ஆம் ஆண்டு சிவரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இதையடுத்து இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது . இந்நிலையில் தொகுப்பாளர் தீபக் தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது .