Categories
அரசியல் மாநில செய்திகள்

“மகளிர் சுய உதவிக் கடன்கள் தள்ளுபடி”…? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு..!!

கூட்டுறவு வங்கிகளில் பெண்கள் வாங்கிய மகளிர் சுய உதவிக் கடன்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில், பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில், அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும், பொதுமக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, நூறு நாட்களுக்குள் குறைகள் தீர்க்கப்படும். அதேபோல, திமுக ஆட்சிக்கு வந்ததும், மகளிர் சுய உதவி கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், ஐந்து சவரன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |