ஆனியன் சிக்கன் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/4 கிலோ
சின்ன வெங்காயம் – 150 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
செய்முறை:
முதலில் சிக்கனை ஒரு பாத்திரத்தில் எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கியபின்,தண்ணீரால் சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு சின்ன வெங்காயத்தை நீளவாக்கிலும், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித் தழையை சிறு துண்டுகளாகவும் நறுக்கி எடுத்து கொள்ளவும்.
பிறகு காய்ந்த மிளகாயை சிறு துண்டுகளாக கிள்ளி கொள்ளவும். பிறகு மிக்சிஜாரில் நறுக்கிய இஞ்சி, பூண்டுகளை போட்டு மையாக பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
அடுப்பில் அகலமான கடாயை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தில் பாதியை மட்டும் போட்டு, பொன்னிறமாக வதக்கிய பின்பு அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள் சேர்த்து சில நிமிடம் நன்கு வதக்கியபின், ருசிக்கேற்ப உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து சிலநிமிடம் நன்கு வேக விடவும்.
இறுதியில் வேக வைத்த சிக்கன் நன்கு வெந்து, அதிலுள்ள தண்ணீர் வற்றியபின் நறுக்கி வைத்த மீதியுள்ள வெங்காயத்தை சேர்த்து கரண்டியால் நன்கு பிரட்டி சில நிமிடத்தில் கழித்து கெட்டியானபின், அதில் நறுக்கிய கொத்தமல்லித் தழையை தூவி இறக்கி வைத்து, சாதத்துடன் பரிமாறினால், ருசியான ஆனியன் சிக்கன் வறுவல் ரெடி.