Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலையேற்றம்: தர்மசங்கடமாக உள்ளது…. என்னோட பதில் இது தான் – நிர்மலா…!!

பெட்ரோல் டீசல் விலையேற்றம் ஒரு எரிச்சலூட்டும் போரச்சினையாக உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது உள்ள மிகப்பெரிய பிரச்சினை ஒன்று பெட்ரோல் டீசல் விலையேற்றம். தங்கம் விலை கூட விலை உயர்வாக இருந்த போது கூட இவ்வளவு எதிர்ப்பு வந்தது கிடையாது. அந்த அளவுக்கு இப்போது பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. நகரங்களில் பெட்ரோல் விலை 100 க்கு விற்பனையாகிறது. இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் முந்தைய காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்று பிரதமர் மோடி மறைமுகமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வு பிரச்சனை எரிச்சலூட்டும் பிரச்சினையாக இருப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு என்ன என்று கேட்டால் விலை குறைக்கப்படும் என்பதைத் தவிர வேறு எந்த பதிலும் கிடையாது என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய நிர்மலா,” இதுபோன்ற சூழல்களில் நான் என்ன சொன்னாலும் அது பிரச்சினையில் இருந்து விலகுவது போல தான் அனைவருக்கும் தெரியும். உண்மையாக நான் நடப்பதை கூறுகிறேன். இத குறித்த கேள்விக்கு கண்டிப்பாக விலை குறைக்கப்படும் என்பது மட்டுமே என்னுடைய பதில். வேறு என்ன சொன்னாலும் அது யாருக்கும் திருப்தி கொடுக்காது. இது ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை இந்த பிரச்சினைக்கு மத்திய மற்றும் மாநில அரசு தீர்வு காணும்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |