Categories
மாநில செய்திகள்

வரும் 22 ஆம் தேதி வரை…. இந்த மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வுமையம் தகவல்…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 22 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தி மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் வரும் 22 ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று இரவு முதல் சென்னையில் லேசான மழை பெய்துள்ளது. மேலும் விழுப்புரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இதையடுத்து வேலூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |