உன்னாவ் சிறுமிகளின் கொலை வழக்கில் ஒரு தலை காதல் காரணத்தால் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநில உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 3 சிறுமிகள் தன் வீட்டில் வளர்க்கும் மாடுக்காக கடந்த இரண்டு நாள் முன்னாடி தீவனம் வாங்க கடை வீதிக்கு சென்று உள்ளனர் . ஆனால் கடை வீதிக்கு சென்ற மூன்று பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் குழந்தைகளை தேடுவதற்காக அவர்களின் வயலுக்கு போய் பார்க்க சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தன் மகள்கள் மூன்று பேரும் வாயில் துணியால் கட்டப்பட்டு இறந்த நிலையில் உள்ளனர். அதில் ஒரு சிறுமி மட்டும் உயிருக்கு போராடியுள்ளார்.
உடனே சம்பவம் இடத்திற்கு தகவல்அறிந்து வந்த போலீசார் உயிருடன் இருக்கும் சிறுமியை மீட்டு கான்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள் .அந்த சிறுமி அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார், பாலியல் பலாத்காரத்தால் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்திருக்கலாம் என்று வழக்கு பதிவு செய்தார்கள். கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து தேடுதலில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் சிறுமிகளின் உடல் பிரேத பரிசோதனையில் அவர்களின் உடம்பில் எந்த ஒரு காயம் இல்லை என்றும் அவர்கள் விஷம் குடித்துதான் இறந்துள்ளதாக தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது .அதன்படி சிறுவன் உட்பட அந்த பகுதியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து அந்த மாநிலத்தின் ஐஜி லக்ஷ்மி சிங் பேசும்போது, அந்த பகுதியை சேர்ந்த வினை மற்றும் அவருக்கு உதவிய ஒரு சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளதாக கூறினார். வினை என்பவர் ஊரடங்கு காலத்தில் சிறுமிகள் அந்த வயல்வெளிக்கு வரும்போது சிறுமிகளிடம் பேசி வந்துள்ளார். அதில் ஒரு சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த சிறுமி அவரின் காதலை மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வினை சிறுமியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதேபோல் சிறுமிகள் மூன்று பேரும் வயல்வெளிக்கு வரும்போது அவர் காதலித்த அந்த சிறுமிக்கு தண்ணீர் தாகம் எடுக்க அந்த தண்ணீரில் வினை பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்துள்ளார் .அதை குடித்தவுடன் கூட இருந்த 2 சிறுமிகளும் தண்ணீரை குதித்துள்ளனர் .ஆனால் மற்ற 2 சிறுமிகள் தண்ணீர் குடிப்பதை வினை தடுக்க முயற்சி செய்துள்ளதாக வாக்குமூலம் கொடுத்ததாக ஜிஜி லக்ஷ்மி சிங் கூறியுள்ளார். இந்த வாக்குமூலம் குறித்து தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.